சிரியாவில் மோதல் தொடர்கிறது

Sunday, 06 January 2013 - 12:33

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81

 


சிரிவாவில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரும் நோக்கில், தொடர்ந்தும் எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெறும் நிலையில், சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாட் நாட்டு மக்களுக்கு முக்கிய உரையொன்றை ஆற்றவுள்ளதாக அரச ஊடகமான சனா தெரிவித்துள்ளது.
இந்த உரையின் போது, சிரியா மற்றும் அதன் பிராந்தியத்தின் தற்போதைய நிலை குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிரிய தலைநகர் டமஸ்கசிற்கு அண்மையில் கடுமையான மோதல் இடம்பெற்று வரும் நிலையில், மக்களுக்கான ஜனாதிபதியின் உரை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போராளிகளின் தாக்குதல்கள் காரணமாக பல முக்கிய நகரங்கள் அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன.
டமஸ்கசை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் போராளிகளின் தாக்குதல்களுக்கு, விமான தாக்குதல்கள் உட்பட்ட பாரிய எதிர்ப்பு தாக்குதல்களை அரச துருப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனாதிபதி அசாட்டின் நிர்வாகத்திற்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பமான தாக்குதல்கள் காரணமாக இது வரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த நொவம்பர் மாதம் ஜனாதிபதி ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்றில், தமது மரணம் ஏற்படும் வரையில் சிரியாவிலேயே வாழப்போவதாக தெரிவித்திருந்தார்.
போராளிகளின் நேற்றைய தாக்குதலின் போது ஹரஸ்ரா மற்றும் தரயா ஆகிய பிரதேசங்கள் போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாக சிரிய மனித உரிமைகளை கண்காணிக்கும் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, சிரிய பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வரும் நோக்கில் பல நாட்டு ராஜதந்திரிகர்களின் முயற்சிகள் இதுவரை வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.