வெனின்சுலாவின் புதிய தேசிய பேரவை தலைவர்

Sunday, 06 January 2013 - 12:39

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+

வெனின்சுலா ஜனாதிபதி ஹியூகோ சவஸ், புற்று நோய் சத்திரசிகிச்சைக்கு உட்பட்டு கியூபாவில் உள்ள நிலையில், வெனின்சுலாவின் தேசிய பேரவை புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் நெருங்கிய சகாவான கபல்லாவை வெனின்சுலாவின் தற்காலிக நிர்வாகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, எதிர்வரும் வியாழக்கிழமை ஜனாதிபதி ஹியூகோ சவாஸ் புதிய காலத்திற்கான ஜனாதிபதியாக பதவி ஏற்க தவறும் பட்சத்தில், மீண்டும் தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும் என எதிர்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
எதிர்கட்சியினரின் கோரிக்கையை முற்றாக நிராகரித்துள்ள பிரதி ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ, ஜனாதிபதி வியாழக்கிழமை பதவி ஏற்க தவறும் பட்சத்தில், பிறிதொரு தினம் உயர்நீதிமன்றம் பதவிப் பிரமாணத்தை மேற்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஹியூகோ சவாஸ் குறித்த வியாழக்கிழமை பதவி ஏற்க முடியாமல் போகும் நிலையில் நிர்வாகியாக செயல்படும் கபல்லா பதில் ஜனாதிபதியாக செயல்படுவார் என அரசாங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.