மேலதிகமாக பயணிகள் வருகை மற்றும் இறங்கு கூடம் ஒன்று பலாலி விமான நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தொகுதியினை விமானப் படையின் தளபதி, ஹர்ஷா அபயவிக்கிரம நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
இதன் மூலம், கொழும்பு மற்றும் பலாலி விமான நிலையங்களின் ஊடாக பயணிப்பவர்கள் பெரும் நன்மையடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
படைத்தரப்பினரும், பொது மக்களும் இந்த வருகை மற்றும் இறங்கு கூடத்தை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது குடாநாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பயணிகள் தாமதம் இன்றி விமான நிலையத்தில் இருந்து வெளியேற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.