அரசுக்கு எதிரானவர்கள் கடவுளின் எதிரிகள் - சிரிய ஜனாதிபதி

Sunday, 06 January 2013 - 20:05

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+-+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF


சிரியாவின் அரச எதிர்ப்பாளர்கள் கடவுளின் எதிரிகள் எனவும், மேற்கத்தைய நாடுகளின் கைப்பொம்மைகள் எனவும் சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஷாட் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலத்திற்கு பின்னர் இன்று தொலைக்காட்சியில் தோன்றி அவர் ஆற்றிய விசேட உரையிலேயே இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

[MP3]t50946[/MP3]


அமைச்சரவை உறுப்பினர்களே, ஏனைய கட்சி நண்பர்களே, சகோதர சகோதரிகளே, இன்று பல சவால்களுக்கு மத்தியில் நான் உங்களின் முகம்கொடுக்கிறேன்.
இன்று சிரிய மக்கள் சிவில் யுத்தம் எனப்படும் கறுப்பு மேகங்களால் சூழப்பட்டுள்ளனர்.
அனைத்து பகுதிகளிலும் வேதனைகளே நிறைந்துள்ளன.
இருந்த போதும், எமக்கு எதிரானவர்கள் பல கிளர்;ச்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அவர்கள் கடவுளின் எதிரிகளாக இருக்கின்றனர். ஆனால் மேற்கு நாடுகளின் பொம்மலாட்ட பாவைகளாக செயற்படுகின்றார்கள்.


எ;ன்று சிரிய ஜனாதிபதி தமது உரையில் குற்றம்சுமத்தியிருந்தார்
இதுதவிர, நாட்டில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் நோக்கில் தேசிய ரீதியான கருத்தரங்குகளையும், மக்கள் கருத்துக் கணிப்புகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டிருப்பதாக ஜனாதிபதி அசாட் தெரிவித்தார்.
கடந்த 2011 ஆண்டு மார்ச் மாத காலப்பகுதியில் இருந்து தொடர்ந்து இடம்;பெற்ற மோதல் சம்பவங்களின் போது 60 ஆயிரம் பொதுமக்கள் வரை கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு கணக்கிட்டுள்ளது.
இதற்கு முன்னர் கடந்த வருடம் ஜுன் மாத முற்பகுதியிலேயே சிரிய ஜனாதிபதி பொது கூட்டமொன்றில் பேசியிருந்தார்.
நாட்டின் எந்த இடத்திலும் மகிழ்ச்சி நிலவ வில்லை என அவர் கூறியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.