சென்னை மகாபோதியில் இளம் பிக்கு ஒருவர் தற்கொலை

Sunday, 06 January 2013 - 20:04

%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88


சென்னை எழும்பூரில் உள்ள இலங்கை பௌத்தர்களால் நிர்வகிக்கப்படும் மகாபோதி சங்கம் என்ற பெயரிலான பௌத்த மடத்தில் இளம் பிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது இடுப்பு பட்டியால் அவர் தூக்கிட்டு மரணித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எழும்பூர் தொடரூந்து நிலையத்திற்கு எதிரே கென்னத் லேன் தெருவில் உள்ள மகாபோதி சங்கத்திலேயே இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
சிங்கள பௌத்தர்களால் நடத்தப்படும் குறித்த சங்கத்தின் விடுதிகளில்  இலங்கை மற்றும் இந்தியாவின் ஏனைய  பகுதிகளில் இருந்து செல்லும் பௌத்தர்கள், சுற்றுலாப் பயணிகள் என தங்கிச் செல்வது வழக்கம்.
இதன்படி, பெங்களூரைச் சேர்ந்தவரான ரத்தினபாலா என்ற 27 வயதுடைய துறவி தங்கியிருந்தார்.
பீகார் மாநிலம் புத்தகயாவுக்குச் செல்வதற்காக சென்னை வந்த அவர் இன்று தொடருந்து மூலம் பீகார் செல்லத் திட்டமிட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று காலையில் தனது அறையில் மின்விசிறியில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை கொண்டமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக சென்னை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றினர்.
அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என தெரியவராத நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
ரத்தினபாலாவீன் பூர்வீகம் ஜம்முகாஷ்மீர் மாநிலம் லடாக் எனவும்,  10ம் வகுப்பை நிறைவு செய்தவுடன் அவர் துறவியாகி பெங்களூரில் வசித்து வந்ததாக ஆரம்பவிசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.