பிலிப்பைன்ஸில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
அந்த நாட்டு காவல்துறையினருக்கும், போதை மருந்து கடத்தல்காரர்களுக்கும் இடையே இந்த பரஸ்பர துப்பாக்கி சூட்டு பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் தென்கிழக்கே அட்டிமோனான் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குழுனது நடமாட்டம் இருப்பதாக அறிந்த காவல்துறையினர் குறித்த பகுதியை சுற்றி வளைத்தனர்.
இதன்போது இடம்பெற்ற துப்பாக்கிச் பிரயோகத்தில் 13 குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அரசாங்க தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து பாரிய ஆயுதங்கள், மற்றும் துப்பாக்கி தோட்டாக்கள் என்பனவும் பறிமுதல் செய்யப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.