எச் ஐ வி நோய் தொற்று

Monday, 07 January 2013 - 13:36

%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%90+%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+

எச்.ஐ.வி எய்ட்ஸ் வைரஸ் தொற்றுக்குள்ளான 192 பேர் கடந்த வருடத்தில் மாத்திரம் அடையாளங் காரணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவின் விசேட நிபுணர் டிலானி ராஜபக்ஸ இதனை தெரிவித்துள்ளார்.

1987 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் கடந்த வருடத்திலேயே இந்த நோய் தொற்றுக்கு உள்ளான அதிகளவானவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த வருடத்தில் எச் ஜ வி தொற்றுக்கு உள்ளானவர்களில் 118 ஆண்களும் அடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பற்ற உடலுறவு காரணமாகவே இந்த தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவின் விசேட நிபுணர் டிலானி ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.