நான்கு பேரடங்கிய குழு

Monday, 07 January 2013 - 13:32

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81

பிரதம நீதியரசருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள குற்றவியல் பிரேரணை அறிக்கை தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நான்கு பேரடங்கிய குழு இன்று கூடவுள்ளது.

இந்த தகவலை ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்ட இந்த நான்கு பேர் அடங்கிய குழுவில் பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணர்கள் உள்ளடங்குகின்றனர்.

எவ்வாறாயினும் இந்த குழுவில் அடங்குகின்ற பிரதிநிதிகளின் பெயர் விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை எனவும் ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக குறிப்பிட்டுள்ளார்.