மகாராஷ்டிராவின் துலி பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் பலியாகினர்.
சம்பவத்தில் 176 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இவர்களில் 113 காவல்துறை அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர்.
உணவு விடுதி ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பாக எழுந்த வாக்குவாதம் காரணமாகவே, இவ்வாறு இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.