தீர்மானத்தில் மாற்றமில்லை - ஜேசன் கெனீ

Monday, 07 January 2013 - 13:39

%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+-+%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80


இலங்கையின் மனித உரிமைகளின் மேம்பாடு ஏற்படும் வரையில், இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் கனடா கலந்து கொள்வதில்லை என்ற தீர்மானத்தில் மாற்றம் இருக்காது என்று கனடா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட கனேடிய குடியுரிமை குடிவரவு மற்றும் பல்லின கலாசாரம் தொடர்பான கனேடிய அமைச்சர் ஜேசன் கெனீ இவ்வாறு குறிப்பிட்டார்.

[MP3]t50983[/MP3]

இதனிடையே, இலங்கையின் மனித உரிமைகள் பேணப்படாமையினால் இனப்பிரச்சினைக்கான உரிய தீர்வும் காண முடியாதுள்ளது.

இதுவே, கனடா போன்ற நாடுகளுக்கு அதிகளவான அகதிகள் வருவதற்கான காரணமாகும் என்று கனடா நம்புவதாகவும் கனேடிய அமைச்சர் ஜேசன் கெனீ சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட மன்னார் மாவட்டத்திற்கு 18 ஆயிரத்து 700 அமெரிக்க டொலர்களை கனடா வழங்கவுள்ளது.

இந்த நிதியுதவியானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக அமையும் என தாம் நம்புவதாகவும் கெனீ குறிப்பிட்டுள்ளர்.

உணவு பொருட்கள் அல்லாத பொருட்கள் இந்த நிவாரண பொருட்களில் அடங்கும்.

கெரிட்டாஸ் அமைப்பின் சர்வதேச பணிப்பாளர் ஜோர்ஜ் சிகாமணி விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே இந்த உதவிகள் வழங்கப்பட உள்ளன.