காதல் தொடர்பே மரணத்துக்கு காரணம்

Monday, 07 January 2013 - 13:38

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8Dகொழும்பு கோட்டை டெலிகொம் கட்டடத்திற்கு அருகாமையில் உள்ள லோட்டஸ் வீதி மேம்மபாலத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட காவல்துறை பெண்ணின் கொலைக்கான காரணம் காதல் தொடர்பே என தெரியவந்துள்ளது.

இதனை காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

ஆரம்ப விசாரணைகள் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி குறிப்பிட்டுள்ளார்.

கோட்டை காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட லோட்டஸ் வீதி மேம்பாலத்தின் நடுவில் உதவி காவல்துறை அதிகாரியினால் குறித்த பெண்காவல்துறை அதிகாரி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை தலைமையகத்திற்கு உட்பட்ட விளையாட்டு பிரிவில் சேவையாற்றிய குறித்த பெண்காவல்துறை அதிகாரி பிபில - நன்னபுராவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, சந்தேகத்திற்குரிய உதவி காவல்துறை அதிகாரி இதன்போது விஷமருந்தியதோடு, தற்சமயம் அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் அதி தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சந்தேகத்திற்குரியவர் மொனராகலை காவல்நிலையத்தில் சேவையாற்றி வந்துள்ளதுடன், அவர் வலப்பனையை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.