குற்றவியல் பிரேரணை சபை விவாதங்கள் எதிர்வரும் வாரத்தில்

Monday, 07 January 2013 - 19:32

%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இன்று இடம் பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தில் இருந்து ஐக்கிய தேசிய கட்சி, ஜே வீ பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியன வெளிநடப்பு செய்தன.

இது தொடர்பான தகவல்களை தமிழ் தேசிய கூட்டபை;பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தருகிறார்.

[MP3]t50997_1[/MP3]

இதேவேளை, பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பான நாடாளுமன்ற விவாதங்கள் எதிர்வரும் 10 ஆம் மற்றும் 11 ஆம் திகதிகளில் இடம் பெறவுள்ளதை பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியும் உறுதிப்படுத்தினார்.


[MP3]t50997_2[/MP3]

நாளைய தினம் திவிநெகும தொடர்பான சட்டமூலம் செயல்பாடுகள் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

அதேவேளை, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்கட்சிகளை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சித் தலைவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஜே.வி.பி. இன் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல ஆகியோரே வெளிநடப்புச் செய்தனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல இந்த வெளிநடப்பு குறித்து கருத்து தெரிவிக்கையில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை ஏற்றுக்கொள்ளாத நாடாளுமன்றத்தில் நாம் எப்படி செயல்பட முடியும்? என கேள்வி எழுப்பினார்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அந்த கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிரிசேன மாறுபட்ட கருத்தினை வெளியிட்டார்.

கட்சி தலைவர்கள் கூட்டம் நிறைவடைந்ததன் பின்னரே, எதிர் கட்சி பிரதிநிதிகள் வெளிநடப்பை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

[MP3]t50997_3[/MP3]