தெரிவுக்குழுவின் அறிக்கை ரத்து, ரீட் உத்தரவு

Monday, 07 January 2013 - 19:25

%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%2C+%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்ற பிரேரணை குறித்த நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் அறிக்கையை ரத்து செய்து ரிட் உத்தரவினை மேன் முறையீட்டு நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
குற்ற பிரேரணை அறிக்கை தொடர்பாக பிரதம நீதியரசர் தாக்கல் செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விசாரணைக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதியரசர் ஸ்ரீஸ்காந்தராஜாவின் தலைமையிலான அணில் குணரட்ன, ஏ.டபிள்யூ.ஏ. சலாம் ஆகிய நீதியரசர்களைக் கொண்ட குளாம் ஒன்றின் முன்னிலையில் இந்த விசாரணைகள் இடம்பெற்றது.
உயர் நீதிமன்றத்தின் விளக்கத்திற்கு அமைய தெரிவுக் குழுவிற்கு சட்ட ரீதியான அதிகாரம் இல்லை என தெரிவித்தே, அதன் அறிக்கையை மேம் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட தருணத்தில், பிரதிவாகிகளான ஜே.வி.பி. இன் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவர் ஆர். சம்பந்தன் ஆகியோர் சார்பாக சட்டதரணி எம்.ஏ. சுமந்திரன் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
எனினும், ஐக்கிய தேசிய கட்சியின் எந்த உறுப்பினர்களும், இன்று நீதிமன்றத்தில் பிரசன்னமாகி இருக்கவில்லை.


எப்படியிருப்பினும், சட்டமா அதிபர் பாலித பர்ணாண்டோ நீதிமன்றத்தில் சமூகம் அளித்திருந்தார்.
குற்றச்சாட்டப்பட்டுள்ள எவரும், நீதிமன்ற விசாரணைகள் இடம்பெறும் பொழுது அவர்கள், தலையீடு செய்யக் கூடாது என சட்டமா அதிபா குறிப்பிட்டார்.
நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றத்திற்கு எதிராக விசாரணைகள் இடம்பெறும் சந்தர்ப்பத்திலும், இவ்வாறான தலையீடுகள் இருக்கக் கூடாது என சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை விசாரிப்பதற்கான அதிகாரம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.