சட்டக்கல்லூரி பரீட்சை முறைகேடுகள

Monday, 07 January 2013 - 19:37

%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3

கடந்த வருடம் இடம்பெற்ற சட்டக் கல்லூரி நுழைவு பரீட்சையின் போது, முறைகேடுகள் இடம்பெற்றதாக தெரிவித்து, மகஜர் ஒன்றை கையளிக்க வந்த மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இன்று முற்பகல் முறுகல் நிலை ஏற்பட்டது.
கொழும்பு சட்டக் கல்லூரி முன்பாக மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போதே இந்த நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட கல்லூரி நுழைவு மாணவர் ஒன்றியம் இந்த விடயம் தொடர்பாக எதிர்ப்பு நடவடிக்கையாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து சட்டக் கல்லூரி வரை பேரணி ஒன்றையும் நடத்தியிரந்தனர்.
பேரணி நடத்தியவர்கள் சட்டக்கல்லூரி முன்பாக நிலத்தில் அமர்ந்து, அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த சந்தப்பம் வழங்கப்பட வேண்டும் என எதிர்ப்பினை வெளியிட்டனர்.
பின்னர் சட்டக் கல்லூரியின் அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளிக்க முயன்ற போதே காவல்துறையினருடன் முறுகல் நிலை ஏற்பட்டது.
எப்படியிருப்பினும், பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளுக்கு சட்டக் கல்லூரி அதிபரை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.