மெக்சிக்கோவில் இடம் பெற்ற இருவேறு துப்பாக்கி பிரயோக சம்பவங்களில் ஒன்பது பேர் பலியாகினர்.
இரண்டு மதுபான சாலையினுள் அதிரடியாக நுழைந்த துப்பாக்கிதாரிகள் இந்த கொலைகளை
செய்துள்ளதாக மெக்சிக்கோ காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டொரியோன் நகரத்தில் உள்ள இருமதுபானசாலையினுள் கிட்டதட்ட ஒரே நேரத்தில் இந்த துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

போதைவஸ்து விநியோக ஆளுமையை நிலைநாட்டும் நோக்கிலேயே இந்த கொலைகள் இடம் பெற்றிருக்கலாம் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுவரை, துப்பாக்கிதாரிகள் எவரும் கைது செய்யப்படவில்லை.
இந்த சம்பத்தினை அடுத்து நகரில் உள்ள அனைத்து இரவு விடுதிகள் மற்றும் மதுபான சாலைகளும் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மெக்சிக்கோவில் தொடர்சியாக இடம் பெற்று வரும் வன்செயல்களை கட்டுப்படுத்துவது குறித்து தமது நிர்வாகம் அதிகம் கவனம் செலுத்தும் என கடந்த மாதம் புதிதாக நியமனம் பெற்ற மெக்சிக்கோவின் ஜனாதிபதி என்றியூக் பெனா நைட்டோ சுட்டிக்காட்டியிருந்தார்
இதனிடையே, கடந்த ஆறு வருட காலங்களில் மாத்திரம் போதைவஸ்து கடத்தல் மற்றும் உற்பத்தி தொடர்பாக இடம் பெற்ற தாக்குதல்களில் 60 ஆயிரம் மக்கள் பலியாகியிருந்தமை குறிப்பிடதக்கது.