திவிநெகும சட்டமூல விவாதம் இன்று.

Tuesday, 08 January 2013 - 8:39

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81.

திவிநெகும திணைக்களம் ஒன்றை உருவாக்குவது தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றில் இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் தயாராகின்றது.


இதன்போது உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, திவிநெகும சட்ட மூலம் தொடர்பான திருத்தம் 12இன் 10வும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்த திருத்தச் சட்டமூலம் குழுநிலை விவாதத்தில் போது மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய இரண்டு சட்ட மூலங்களும் மூன்றில் இரண்டு பெறும்பான்மையுடன் நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, திவிநெகும சட்டமூலத்திற்கு தமது கட்சி எதிராக வாக்களிக்கும் என்று ஜே வி பி ஏற்கனவே அறிவித்துள்ளது.

எனினும், இதுதொடர்பிலும், குற்றவியல் பிரேரணை தொடர்பிலும் தமது கட்சியின் நிலைப்பாடு இன்று இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னரே அறிவிக்கப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

எனினும் இன்று இடம்பெறும் குழுநிலை விவாதத்தில் தமது பங்கு கொள்ளும் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மன் கிரியல்ல தெரிவித்தார்.

எவ்வாறாயினும், திவிநெகும சட்ட மூலத்திற்கு தமது கட்சி எதிராக வாக்களிக்கும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் எமது செய்தி சேவைக்கு தகவல் தருகிறார்.

[MP3]t51019_1[/MP3]

இதனிடையே, இன்று முற்பகல் தமிழ் தேசிய கூட்டமைப்பு விசேட கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி. அரியனேந்திரன் தெரிவித்துள்ளார்.

[MP3]t51019_2[/MP3]