ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக சுமார் 100 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காட்டு தீ பல்வேறு இடங்களுக்குப் பரவி வரும் நிலையில், பெரும் சேதம் ஏற்பட்டு வருகின்றது.
இதன்காரணமாக 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அந்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதிக வெப்பம் காரணமாகவே இந்த காட்டுத் தீ ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ, குடியிருப்புப் பகுதிகளுக்கும் பரவியுள்ளது. 40க்கும் மேற்பட்ட இடங்களில் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, பாதிப்புக்குள்ளான பகுதிகளை பிரதமர் ஜூலியா கில்லர்டு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.