ஊடகவியலாளருக்கு சிறை

Tuesday, 08 January 2013 - 13:32

%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88++

 

சமூக வலைத்தளத்தின் ஊடாக அவதூறு பரப்பிய குற்றத்தின் பேரில் பத்திரிகையாளர் ஒருவர் குவைத்தில் சிறை வைக்கப்பட்டார்.
 
வளைகுடா நாடான குவைத் நாட்டில் சமூக வலைதளங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் அயாத் அல்-ஹர்பி என்ற குறித்த பத்திரிகையாளர் சமூக வலைதளத்தின் ஊடாக, குவைத் மன்னராட்சி பற்றியும், மேற்குல நாடுகளுடன்  அவர்கள் ஏற்படுத்தியுள்ள நட்புறவு தொடர்பிலும் அவதூறு பரப்பியாக குற்றம்சாட்டப்பட்டது.
 
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
குவைட்டில், பத்திரிகையாளர் ஒருவருக்கு இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்படுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.