அண்டவெளியில் உள்ள சூரிய மண்டலத்தில் காணப்படும் ஒவ்வொரு ஆறு நட்த்திரங்களில் ஒன்று பூமியின் பிரமாணத்தைக் கொண்டுள்ள நட்சத்திரங்களாக திகழ்வதாக விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு அமைய சூரிய மண்டலத்தில் ஆயிரத்து 700 நட்சத்திரங்கள் பூமியின் அளவில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் நஷனல் ஏரோநோட்டிக் அன்ட் ஸ்பேஸ் அட்மின்ஸ்ரேஷன் என அழைக்கப்படும் நாசாவின் விஞ்ஞானிகள் குளாமினால் இனம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபரங்கள் கலிபோனியாவில் இடம்பெற்ற அமெரிக்க வானசாஸ்திர சங்கத்தின் 221ஆம் மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, சூரிய குடும்பத்தில் உள்ள அண்டவெளியில் மேலும் 461 புதிய கிரகங்கள் வான சாஸ்திர விஞ்ஞானிகளினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.