இலங்கை கிரிக்கட் அணியின் ஒருநாள் பந்துவீச்சாளர் லசித் மாலிங்கவின் மூன்று விதமான பந்துவீச்சுகள் தொடர்பில் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீராகள் அவதான இருக்க வேண்டும் என்று, அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர் டேவிட் ஹசி தெரிவித்துள்ளார்.
லசித் மாலிங்க அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக பந்துவீசக்கூடியவர்.
அவரது மிதவேகபந்து, பவுன்சர் மற்றும் யோக்கர் பந்துகளை, அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள் அவதானமாக எதிர்த்தாட வேண்டும் என்றும் ஹசி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி நாளை மறுதினம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.