ஈராக்கின் - அபு கரைப் சிறையில் இருந்த கைதிகளுக்கு, அமெரிக்காவின் பாதுகாப்பு நிறுவகம் ஒன்று 5 மில்லியன் டொலர்களை நட்ட ஈடாக வழங்கியுள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு இந்த சிறைக் கைதிகளை அமெரிக்க இராணுவத்தினர் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த குற்றச்சாட் நிரூபிக்கப்பட்ட நிலையில், குறித்த நட்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சிறையில் இருந்து 71 கைதிகளுக்கு இந்த நட்ட ஈடு வழங்கப்பட்டுளு;ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை இதேபோன்ற குற்றச்சாட்டின் கீழ், அமெரிக்காவின் மற்றுமொரு பாதுகாப்பு நிறுவகத்தின் மீதான வழக்கு தொடர்ந்து இடம்பெறுகிறது.