கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்

Thursday, 10 January 2013 - 7:53

%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D

மலேசிய நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்ட ஏழு கைதிகள் காவற்துறையினரின் கண்களுக்கு மிளகாய் தூளை தூவி தப்பிச் சென்றுள்ளனர்.

மலேசிய பினாங்க் பகுதியை சேர்ந்த குறித்த குற்றவாளிகளை உள்ளூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த அழைத்து சென்ற போதே இவர்கள் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட கைதிகள் ஒருவருக்கொருவர் மோதலில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து,காவற்துறை வாகனத்தின் பின்புற கதவை திறக்க காவற்துறையினர் சென்றுள்ளனர்.

இதன்போதே, மிளகாய் தூளை தூவி விட்டு  கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.