பழங்குடியினத்தவர்களிடையே மோதல்

Thursday, 10 January 2013 - 19:48

%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
கென்யா பழங்குடியினத்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 8 பேர் பலியாகினர்.
கென்ய டாணா நதிச் சமவெளிப் பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் இடையே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொகோமோ மற்றும் ஓர்மா பிரிவினர் வாழ்கின்றனர்.
இவர்களுக்கு இடையே கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் மோதல் ஆரம்பித்தது.
தண்ணீர் மற்றும் விளைநில பகிர்வின் போதே இவர்களுக்கு இடையில் மோதல் ஆரம்பித்தது.
இவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில், டாணா நதிச் சமவெளிப் பகுதியில் ஏற்பட்ட மோதலில் 8 பேர் உயிரிழந்தனர்.
சம்பவத்தின் போது 9 பேர் காயமடைந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தலைநகர் நைரோபியில் தெரிவித்தார்.
இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இதுவரையில் 140 பேர் வரையில் பலியாகியுள்ளமை குறிப்பித்தக்கது.