மீண்டும் விசாரணை

Thursday, 10 January 2013 - 19:49

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88

இந்தியாவின் டில்கி நகரில் ஆறு பேரினால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் உயிரிழந்த 23 வயது மருத்துவ மாணவியின் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களுள், மூன்று பேரின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள், சந்தேக நபர்கள் காவற்துறையினரால் துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.
அத்துடன் அவர்களுக்கு எதிரான சாட்சியங்கள் சோடிக்கப்பட்டவை என்றும் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பிலான டீ.என்.ஏ.பரிசோதனைகள் குற்றத்தை நிரூபித்துள்ளன.
அத்துடன் இது தொடர்பில் இன்றைய தினம் டில்கி காவற்துறையினர் சமர்பித்த முழுமையான அறிக்கைiயும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த வழக்க எதிர்வரும் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.