இலங்கை - அவுஸ்திரேலியா மோதல்

Friday, 11 January 2013 - 8:57

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+-+%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+

 

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
அத்துடன் நுவான் குலசேகரவும் சிறந்த உடல்நிலையில் இருப்பதாக, நேற்றையதினம் பயிற்சியின் போது அணித்தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இன்றை ஆடுகளம் வேகப்பந்து வீச்சிக்கு சாதகமாக இருக்கும் என்று ஆடுகள தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அவுஸ்திரேலியாவில் இன்று வெப்பமான காலநிலையும் நிலவுகிறது.
இது இலங்கை அணியின் வீரர்களுக்கு சாதமாக இருக்கும் என்று கிரிக்கட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.