இந்தியா மறுப்பு

Friday, 11 January 2013 - 8:57

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+

 

இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்ற இரண்டு இந்திய துருப்பினர்கள் குறித்து, பாகிஸ்தான் முன்வைத்த யோசனையை இந்தியா நிராகரித்துள்ளது.
பாகிஸ்தான் துருப்பினரே இந்திய துருப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை கொலை செய்தாக இந்தியா குற்றம் சுமத்தி இருந்தது.
இது தொடர்பில் இந்தியாவுக்கான பாகிஸ்தானின் சிரேஷ்ட பிரதிநிதி ஒருவரையும் அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகளின் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளும் திட்டத்தை பாகிஸ்தான் முன்வைத்திருந்தது.
எனினும் இந்த யோசனையை இந்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது.