அவுஸ்திரேலிய அணி வெற்றி

Friday, 11 January 2013 - 19:12

%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே இன்று இடம் பெற்ற முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 107 ஒட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 305 ஒட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் பிலிப் ஹயூஜஸ் 112 ஒட்டங்களையும் ஜோர்ஜ் பெய்லி 89 ஒட்டங்களையும் பெற்று கொடுத்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 40 ஒவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 198 ஒட்டங்களை மாத்திரமே பெற்றது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக பிலிப் ஹயூஜஸ் தெரிவு செய்யப்பட்டார்.