பாகிஸ்தானில் துக்க தினம்

Friday, 11 January 2013 - 19:20

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

பாகிஸ்தானிய குவாட்ட மாகாணத்தில் இடம் பெற்ற தொடர்சியான குண்டு வெடிப்புக்களினால் ஏற்பட்ட பாரிய உயிர்; சேதத்திற்குஇ மூன்று நாள் துக்க தினம் அனுஷ்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஷியா முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் இடம் பெற்ற இந்த தொடர் குண்டு வெடிப்பு காரணமாக 92 பேர் கொல்லப்பட்டதுடன் 120க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

முதலாவது குண்டு தாக்குதலில் பாதிப்படைந்த மக்களுக்கு உதவ முற்பட்ட மனித உரிமை ஆர்வலர் இர்பான் அலியும் மரணமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களுக்கு சுன்னி முஸ்லிம் போராளி குழுவான லஷ்கர் ஈ ஜங்வி பின்னணியில் இருந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளது.

சுன்னி மற்றும் ஷியா முஸ்லிம் பிரிவினருக்கிடையே வளர்ந்து வரும் பிரிவினையை இந்த தாக்குதலும் சுட்டுக்காட்டுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளைஇ கடந்த 2009 ஆம் ஆண்டு தாலிபான் போராளிகள் பாகிஸ்தானிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த போதிலும் போராளிகளின் தாக்கம் தொடர்ந்தும் பல சந்தர்ப்பங்களில் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.