மாலியில் பிரான்ஸ் துருப்பினர்

Saturday, 12 January 2013 - 7:14

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D

வடக்கு மாலியில் உள்ள ஸ்லாமிய போராளிகளுக்கு எதிராக தமது படையினரை மோதலில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதை பிரான்ஸின் ஜனாதிபதி பிரான்கொஸ் ஹொலண்டே தெரிவித்துள்ளார்.

மாலியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக மோதல்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக பிரான்ஸ் துருப்பினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த பகுதியில் அல்கைடா போன்ற அமைப்புக்களுடன் சேர்ந்த இஷ்லாமிய போராட்டக் குழுக்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றன.

எனினும் சர்வதேச சட்ட விதிகளுக்கு அமைவாகவே பிரான்ஸ் படையினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.