பிரச்சினை இன்னும் முடியவில்லை

Sunday, 13 January 2013 - 14:30

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+

 

ஜே வி பியினால் கொழும்பில் இன்று நடத்தப்பட்டு செய்தியாளர் சந்திப்பின் போது,  பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பில் கருத்து வெளியிடப்பட்டது.
இதன்போது கருத்துரைத்த ஜே வி பியின் செயலாளர் டில்வின் சில்வா, குற்றவியல் பிரேரணை குறித்த போராட்டத்தில், அரசாங்கமும், நீதித்துறையும் தோல்வி அடைந்திருப்பதாக தெரிவித்தார்.
இந்த விடயத்தில் நீதித்துறை மாத்திரமே தோல்வி அடைந்திருப்பதாக கருதப்படுகிறது.
ஆனால் இதில் அரசாங்கமும் தோல்வி அடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில் இந்த பிரச்சினை நிறைவடைந்து விட்டதாக கருத முடியாது.
இனிதான் புதிய பிரச்சினைகள் ஆரம்பிக்கும் என்றும் டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.