இலங்கை அணி வெற்றி

Sunday, 13 January 2013 - 19:56

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF

சுற்றுலா இலங்கை அணிக்கும் அவுஸ்ரேலிய அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 8 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது.

எடிலைட் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 46.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்த நிலையில் 170 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துப்பெடுத்தாடிய இலங்கை அணி 40.1 ஓவர்களில் இரண்டு விக்கட்டுக்களை மாத்திரம் இழந்த நிலையில் பெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில், ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களை பெற்று லகிரு திருமானே போட்டியின் ஆட்டநாயகநாக தெரிவு செய்யப்பட்டார்.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது போட்டி எதிர்வரும் 18 ஆம் திகதி பிரிஸ்பேனில் இடம்பெறவுள்ளது.