இந்தியா மீளாய்வு

Wednesday, 16 January 2013 - 13:29

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+++

வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ் எதிர்வரும் வாரத்தில் இந்தியாவுக்கு பயணம் செய்யவுள்ளார்

இதன்போது இலங்கையில் இந்தியா மேற்கொண்டு வரும் வேலைத் திட்டங்கள் தொடர்பில் மீளாய்வுகள் இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

அமைச்சர் ஜி எல் பீரிஸ் தமது இந்திய பயணத்தின் போது இந்திய இலங்கை கூட்டு ஆணைக்குழுவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்

இந்த சந்திப்பின்போது, தொழில்நுட்பம், விவசாயம், உட்பட்ட விடயங்களில் இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்து ஆராயப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான இலங்கையின் பிரதிநிதிகள் சிலரும் அங்கு செல்லவுள்ளனர்.

அத்துடன் இந்தியாவில் புதிதாக நியமிக்கப்பட்ட வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மன் குர்சித் தலைமையிலான குழு ஒன்று, இந்த சந்திப்பில் கலந்துக் கொள்ளும்.