மொறட்டுவ பல்கலைக்கழக மோதல்

Thursday, 17 January 2013 - 13:10

%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+

மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவ குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஆறு மாணவர்கள் காயமடைந்த நிலையில் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொழிநுட்ப பீடம் மற்றும் தேசிய தொழிநுட்ப பீட மாணவர்களுக்கு இடையே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த இரண்டு மாணவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் மாற்றப்பட்டுள்ளனர்.

காயமடைந்த ஏனைய மாணவர்கள் களுபோவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறுகின்றனர்.

இந்த முறுகல் நிலை காரணமாக குறித்த இரண்டு பீடங்களும் கால வரையரையின்றி மூடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ருகுனு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தலைவர் ஹர்ச குணவர்தன, மாத்தரை - மெதவத்த பிரதேசத்தில் வைத்து நேற்று இரவு தாக்கப்பட்டுள்ளார்.

சம்வத்தில் காயமடைந்த அவர் மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பிலும் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.