நில அதிர்வுகள் குறித்து ஆய்வு

Friday, 25 January 2013 - 19:40

+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81



அம்பாறை மாவட்டத்தில், அடிக்கடி ஏற்படுகின்ற நில அதிர்வுகள் பாரிய சேதத்தை ஏற்படுத்தக் கூடியவை அல்லவென புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் என்.பீ. விஜயனந்த எமது செய்திப் பிரிவிற்கு இதனை தெரிவித்தார்.
இந்த நில அதிர்வுகள் தொடர்பாக தொடர்ந்தும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அம்பாறையில் இன்று அதிகாலை மூன்று நில அதிர்வுகள் உணரப்பட்டன்.

இந்த நில அதிர்வுகள் சேனநாயக்க சமுத்திரத்திற்கு அண்மையில், உணரப்பட்டதாக அந்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அம்பாறை-வடினாகல-தேவாலஹிந்த, பள்ளங்கல உட்பட தமன பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கிராமங்கள் சிலவற்றிலும் அண்மையில் இவ்வாறான நில அதர்வுகள் உணரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.