பல நீர்தேக்கங்களது அவசர கதவுகள் திறப்பு

Friday, 25 January 2013 - 19:39

%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0+%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக நான்கு மாவட்டங்களில் பல நீர்த்தேக்கங்களின் அவசர கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த தகவலை நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்னை வெளியிட்டுள்ளார்.

மட்டக்களப்பு, திருகோணமலை, பதுளை மற்றும் பொலநறுவை ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட நீர்தேக்கங்களது அவசர கதவுகளே இவ்வாறு திறக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் இரண்டு நாட்களிலும் நாட்டின் பல பாகங்களில் மழை பெய்யக்கூடும் என காலநிலைய அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இந்த நிலையில், இன்று இரவு கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய ஆகிய மாகாணங்களிலும் மழை பெய்யக் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.