ஜனாதிபதியிடம் கோரிக்கை

Saturday, 26 January 2013 - 8:26

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
டோஹா கட்டாரில் மரணதண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கையர் ஒருவரை காப்பாற்றுமாறு ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் இரண்டாம் தடவையாக ஆணையகம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
 
கொலை குற்றம் ஒன்று தொடர்பில் இலங்கையராக வெங்கடாசலம் சுதேஸ்கர் என்ற இலங்கையருக்கு கட்டார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
 
இந்தநிலையில் அவருக்கு எந்தநேரத்திலும்; தண்டனை நிறைவேற்றப்படலாம்.
 
இதனிடையே, கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர், குற்றம் சுமத்தப்பட்டவரிடம் இருந்து நட்டஈடாக 3 லட்சத்து 50000 ரூபாவை கோரியுள்ளனர்.
 
இந்தப்பணம் செலுத்தப்பட்டால் குறித்த இலங்கையரை காப்பாற்ற முடியும்.
 
எனினும் இந்த விடயம் தொடர்பாக அவரின்; குடும்பத்தினர் ஜனாதிபதிக்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கும் அறிவித்த போதும் எவ்வித நடவடிக்கையும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை
 
இந்தநிலையிலேயே இரண்டாவது தடவையாகவும் தாம் கடிதம் எழுதுவதாக ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.