விண்கல் பூமியை கடக்கவுள்ளது

Wednesday, 30 January 2013 - 20:10

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81



எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ம் திகதி அதிவேக விண்கல் பூமியை மிக அருகில் கடந்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012 டிஏ 14 என்று நாமகரனமிடப்பட்ட இந்த விண்கல் பூமிக்கு சுமார் 25 ஆயிரத்து 500 கிலோ மீற்றர் தூரத்தில் கடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சத்து 43 ஆயிரம் டொன் எடையும் 148 அடி நீளமும் கொண்ட இந்த விண்கல் ஒரு கால்பந்தாட்ட மைதானத்தின் அளவில் பாதியளவுக்கு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமது தகவல் தொடர்பு செயற்கை கோள்கள் பூமியிலிருந்து சுமார் 36 ஆயிரம் கிலோ மீற்றர் உயரத்தில் பறந்து கொண்டுள்ளதாக நாஸா அமைப்பின் விண்கல் நிபுணத்துவர் டோன் இயோமேன்ஸ் தெரிவித்துள்ளார்.

இதேபோன்ற விண்கல் ஒன்று 1908 ஆம் ஆண்டு ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் விழுந்து பல்லாயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்புள்ள வனப்பகுதி தரைமட்டமாகி பேரழிவை ஏற்படுத்தியிருந்தாக அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

எனினும், 2012 டிஏ14 என்ற விண்கல் பூமியில் மோத போவதில்லை என நாஸா அமைப்பு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.