பனிப்புயல்

Sunday, 10 February 2013 - 8:42

%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+


வடக்கு மற்றும் கிழக்கு அமெரிக்காவையும், கனடாவின் கிழக்கு  பகுதியையும் தாக்கிய பனிப்புயல் தற்போது மேலும் தீவிரமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இதனால் 5 லட்சம் வீடுகளில் மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் அமெரிக்காவின் வடக்கு கிழக்கு மற்றும் கனடாவின் கிழக்கு பகுதியிலும், இயல்பு வாழ்க்கை முற்றாக பாதித்துள்ளது.

குறிப்பாக பொஸ்டன் போன்றபகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

அத்துடன் புதிய இங்கிலாந்து பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களை, தங்களின் வீடுகளிலேயே தங்கி இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.