மஹா கும்பமேளா

Sunday, 10 February 2013 - 14:26

%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE+

இந்திய புனித கங்கை, ஜமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய நதிகளில் பக்தர்கள் நீராடும் கும்பமேளா நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்த வருடம் 3 கோடி அடியார்கள் பங்கு கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆறு நாட்களுக்கு இடம்பெறும் இந்த நீராடல் நிகழ்வுகளில், உலகிலேயே அதிக அளவிலான அடியார்கள் பங்கு கொள்ளும் நிகழ்வாக கணிக்கப்பட்டுள்ளது.
புனித ஆறுகள் சங்கமிக்கும் பகுதியில் நீராடுவதன் மூலம் பாவங்கள் தீர்வதாக இந்து மக்கள் நம்புகின்றனர்.
கும்பமேளா என்ற இந்த நிகழ்வு ஒவ்வொரு 12 வருடங்களுக்கு ஒரு முறை வருகின்ற போதிலும், இந்த வருடம் மஹா கும்ப மேளா என அழைக்கப்படும் இது 144 வருடங்களுக்குப் பின்னர் அமைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு நடைபெறும் நாட்களில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காவல்துறையினர் உட்பட விசேட கொமாண்டோ படையணியினர் 14 ஆயிரத்திற்கும் அதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த பிராந்தியத்தில் தற்காலிகமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள 14 மருத்துவனைகளில், இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளதுடன், இருவர் மரணமாகியுள்ளதாகவும் மருத்துவ தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலானவர்கள் கடும் குளிர் காரணமாக ஏற்படும் மூச்சு திணறல் மற்றும் மூட்டு உபாதைகளுக்கு சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.