செவ்வாய்க் கிரகத்தில் உலோக பொருள்

Sunday, 10 February 2013 - 20:45

%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D

கடந்த மாதம் கியூரியாசிட்டி ஆய்வக விண்கலம் செவ்வாய் கிரகத்திலிருந்து அனுப்பிய புகைபடத்தில் பாறைகளின் மீது உலோகம் போன்ற பொருள் மின்னி கொண்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்துக்கு கியூரியாசிட்டி ஆய்வக விண்கலத்தை அனுப்பியுள்ளது. 

செவ்வாய் கிரகத்தில் உள்ள மலையொன்றின் மீது ஏறி கியூரியாசிட்டி விண்கலம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. 

அங்குள்ள பாறைகளில் துளைகளை இட்டு மண் மாதிரிகளை சேகரித்து வருகின்றது.
இந்த நிலையில், கடந்த ஜனவரி 30 ம் திகதி கியூரியாசிட்டி அனுப்பிய புகைப்படங்களில் பாறைகளின் மீது உலோகம் போன்ற பொருள் மின்னி கொண்டிருப்பது தெரிய வந்தது.
அது 0.5 சென்றி மீட்டருக்கு குறைவான நீளத்தில் சுருள் போன்ற வடிவத்தைக் கொண்டுள்ளது. 


இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
அதேவேளை கியூரியாசிட்டி, செவ்வாய் கிரக பாறையில் துளையிட்டு  சேகரித்து வரும் மாதிரிகளை ஆய்வு செய்த பின்பே அந்த உலோகம் குறித்து தெரியவந்தாக அவர்கள் கூறியுள்ளனர்.