பரிசுத்த பாப்பரசர் பதவியில் இருந்து விலகுகிறார்

Monday, 11 February 2013 - 19:55

%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

இந்த மாத இறுதியில் பரிசுத்த பாப்பரசர் 16ஆம் பெனடிக் தமது பதவியை ராஜிநாம செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை பாப்பரசரின் வத்திக்கான் செயலகம் உறுதிப் படுத்தியுள்ளது.

இரண்டாவது ஜோன் போல் காலமானதை அடுத்து, கடந்த 2005ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 85 வயதான 16ஆம் பெனடிக் பாப்பரசராக தெரிவானார்.

அதேவேளை, பாப்பரசரின் வத்திக்கான் செயலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், சுகவீனம் காரணமாகவே பாப்பரசர் இந்த முடிவினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

முதிர்ந்த வயதில் கடந்த சில மாதங்களாக எனது பணியினை சிறந்த முறையில் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாப்பரசர் தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.