ரஷ்ய நிலக்கரி சுரங்க வெடிப்பு

Monday, 11 February 2013 - 19:57

%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

ரஷ்ய நிலக்கரி சுரங்கம் ஒன்றில் இன்று இடம்பெற்ற வெடி விபத்தில் 9 சுரங்க தொழிலாளர்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதாக ரஷ்ய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தவிர, மேலும் 9 பேர் சுரங்க இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

ரஷ்ய அரசாங்கத்திற்கு சொந்தமான பாரிய உருக்கு உற்பத்தி சுரங்கத்தில் மீத்தைல் வாயு காரணமாகவே இந்த அனர்த்தம் இடம்பெற்றிருக்கலாம் என உட்துறை அமைச்சு சந்தேகம் வெளியிட்டுள்ளது.