தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்

Tuesday, 12 February 2013 - 8:49

%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+
  
இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகம்மது ஆகிய தீவிரவாத அமைப்புக்கள் திட்டமிட்டுள்ளதாக இந்திய மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
2001 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தாக்குதல் தொடர்பான வழக்கின் குற்றவாளி அப்சல் சனிக்கிழமை டெல்கியின் திஹார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
 
இதனை எதிர்த்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஹ_ரியத் அமைப்புகளும் அதன் சார்பு இயக்கங்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.
 
இந்த நிலையில் இந்தியாவில் தடைசெய்யப்;பட்ட பயங்கரவாத இயக்கங்களான லஷ்கர்-இ- தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது ஆகிய இயக்கங்களின் தளபதிகள் கூட்டம் கடந்த சனிக்கிழமை இரவு பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்றதாக இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த கூட்டத்தில் பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ உளவுப் படையின் அதிகாரிகள் சிலரும் பங்கேற்றதாகத் தகவல் கிடைக்கப்பெற்றதாக இந்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த கூட்டத்தின் போது இந்தியாவின் பல முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த தமது போராளிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.