600 வருடங்களின் பின்னர்.

Tuesday, 12 February 2013 - 8:51

600+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.
 உலக கத்தோலிக்க மத தலைவர் பரிசுத்த பாப்பரசர் 16ஆம் பெனடிக் எதிர்வரும் 28ஆம் திகதி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
 
85 வயதான 16ஆம் பெனடிக் பாப்பரசர் நேற்று வத்திகானில் நடைபெற்ற கார்டினல்கள் கூட்டத்தில் இந்த அறிவிப்பை லத்தீன் மொழியில் வெளியிட்டார்.
 
முதுமை காரணமாக, வத்திகான் அரச நிர்வாக பணிகளை கவனிக்க உடல் வலிமை போதாது என்ற திடமான முடிவுக்கு தான் வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
 
இந்தநிலையில், எதிர்வரும் 28 ஆம் திகதி இரவு 8 மணிக்கு தான் பதவி விலகுவதாகவும், திருச்சபைக்கு இது மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
இதனிடையே, பாப்பரசர் ஒருவர் இவ்வாறு தாமகவே பதவியில் இருந்து விலகுவது 600 ஆண்டுகளுக்கு பின்னராகும்.
 
கடந்த 1415 ஆம் ஆண்டு, அப்போதைய போப் பாண்;டவர் 12 ஆம் கிரிகரி பதவி விலகினார்.
 
அதையடுத்து கடந்த 600 ஆண்டுகளில், போப் பாண்டவராக இருப்பவர், பதவி விலகுவது இதுவே முதல்முறை ஆகும்.
 
பொதுவாக, போப் பாண்டவர் ஒருவர் மறைந்ததும் குறிப்பிட்ட நாட்கள் துக்கம் அனுஸ்டிக்கப்பட்டு பிறகு, புதிய போப் பாண்டவர் ஒருவர் தெரிவுச்செய்யப்படுவார்.
 
எனினும், தற்போதைய போப் பாண்டவர் பதவி விலகுவதால், அடுத்த மாதமே புதிய போப் பாண்டவர் தெரிவு செய்யப்படுவார் என செய்திகள் தெரிவிக்கின்றன.