சுரங்க விபத்து

Tuesday, 12 February 2013 - 13:24

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81

ரஷ்ய நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 18 பேர் பலியாகினர்.

ரஷ்யாவின் வடக்கே, கோமி மாகாணத்தில், நிலக்கரி சுரங்கத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தின் பேது சுமார் 250 யிற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் சுரங்கத்தில் பணியாற்றி கொண்டிருந்தனர்.

சுரங்கத்தின் 2600 அடி ஆழத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த போது மீத்தேன் வேதிப்பொருள் வெடித்தது.

இதில் 18 பேர் பலியாகினர்.

மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள் இதுவரை 10 பேரின் உடல்களை மீட்டுள்ளனர்.

இதனிடையே சம்பவத்தில் பலியானவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உயிரிழந்தவர்களது குடும்பத்தினருக்கு 66 ஆயிரத்து 400 டொலர் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.