புழல் சிறையில் தொலைபேசி கூடங்கள்

Tuesday, 12 February 2013 - 13:26

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

புழல் சிறையில் உள்ள கைதிகள் பயன்பாட்டிற்காக 9 பொது தொலைபேசி கூடங்கள் அமைக்கப்படவுள்ளன.
புழல் சிறைகளில் அடிக்கடி கைத்தொலைபேசிகள் மீட்கப்படுவதும், கையடக்க தொலைபேசி கடத்தல்களும் இடம்பெற்று வருவதாக சிறைச்சாலை கண்காணிப்பாளர் வி.கருப்பண் தெரிவித்துள்ளார்.

இததை தடுக்கும் பொருட்டே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக  அவர் குறிப்பிட்டார்.

அதன்படி புழல் மத்திய சிறையில் 9 பொது தொலைபேசி கூடங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்த பொது தொலைபேசிகளை சிறையில் எந்தப் பகுதியில் அமைப்பது, கைதிகள் தொலைபேசியைப் பயன்படுத்த வேண்டிய நேரம், எவ்வளவு நேரம் கதைப்பது, அவர்களது உரையாடலை கட்டுபாட்டு அறையில் பதிவு செய்யும் தொழில்நுட்ப வசதிகள் போன்றவை தொடர்பில் பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.