வடகொரியா அணு உபகரண பரிசோதனை

Tuesday, 12 February 2013 - 20:11

%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81+%E0%AE%89%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88வடகொரியா தமது மூன்றாவது மிக சக்திவாய்ந்த அணு உபகரண கட்டமைப்பு ஒன்றை பரிசோதித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இந்த பரிசோதனை இடம்பெற்றுள்ளது.

இந்த எச்சரிக்கை வடகொரியாவின் முக்கிய நட்பு நாடான சீனா விமர்சித்துள்ளதுடன், ஏனைய சர்வதேச நாடுகள் வடகொரியாவின் நடவடிக்கைகளுக்கு தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

பூமிக்கு அடியில் மேற்கொள்ளப்படும் அணுவாயுத பரிசோதனைகள் கடந்த 2009 ம் ஆண்டு இரட்டிப்பாகியுள்ளதாக வியன்னாவில் உள்ள அணுவாயுத கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை இந்த விடயம் குறித்து ஆராயும் நோக்கில் அமர்வு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.