சர்வதேச வானொலி தினம் இன்று

Wednesday, 13 February 2013 - 9:05

%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
சர்வதேச வானொலி தினம் இன்றாகும்.
 
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான  யுனெஸ்கோ வருடந்தோறும் பெப்ரவரி 13 ஆம் திகதியை உலக வானொலி தினமாக கடைபிடித்து வருகின்றது.
 
கடந்த 2011 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் 36வது பொதுச்சபை கூட்டத்தில் முதன்முதலாக ஸ்பெயின், நவம்பர் 3ஆம் திகதியை உலக வானொலி தினமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியது.

அதன் பின்னர் பெப்ரவரி 13 ஆம் திகதியை உலக வானொலி தினமாக யுனெஸ்கோ அறிவித்தது.

நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள் பல வழிகளில் அதிகரித்துவிட்டன.
 
எனினும் வெகுஜன ஊடகத்தின் (MASS MEDIA முன்னோடியாக வானொலியே ஆகும்.
 
தகவலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு அளப்பரியது.
ரேடியஸ் ( radius)  என்ற லத்தீன் மொழியில் இருந்தே ரேடியோ என்று மருவியுள்ளது.
 
ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல், மைக்கேல் பாரடே ஆகிய இரண்டு விஞ்ஞானிகள் மின்காந்த அலைகளை, ஒலி அலைகளாக மாற்றும் கருவியை கண்டறிந்தனர்.
 
இவர்களை பின்பற்றி ஹென்றிச் ஹெர்ட்ஸ் என்பவர், மின்காந்த அலைகளை, டிரான்ஸ் மீட்டராக மாற்றினார்.
 
பின்னர், 1909 ஆம் ஆண்டு இயற்பிலுக்கான நோபல் பரிசு வென்ற இத்தாலியின் கூலில்மோ மார்கொனி, வானொலியை கண்டறிந்தார்.
 
இந்த நிலையில், இன்று உலக முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஆப்ரிக்கா, ஆசியா, வளைகுடா போன்ற நாடுகளில் இன்று உலக வானொலிதினத்தை கொண்டாடுகின்றன.