வடகொரியா தனிமை

Wednesday, 13 February 2013 - 13:16

%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88வடகொரியாவின் செயற்பாடுகள், அதனை உலக நாடுகளில் இருந்து மேலும் தனிமைப்படுத்தும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரித்துள்ளார்.

வடகொரியா அணு குண்டு சோதனை நடத்தியமைக்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்தே பராக் ஒபாமா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

வடகொரியாவினால் உலகத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை எதிர்ப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா தலைமைதாங்கி முன்னெடுக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.