16 வருடங்களின் பின்னர்.

Thursday, 14 February 2013 - 8:59

16+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.

 
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணி, அவுஸ்ரேலிய அணியுடன் நேற்று இடம்பெற்ற இருபதுக்கு இருபது போட்டியில் 27 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
 
இந்த வெற்றியானது 16 வருடங்களுக்கு பிறகு அவுஸ்Nருலிய மண்ணில் மேற்கிந்திய தீவுகள் அணி பெறும் முதலாவது வெற்றியாக பதிவாகியுள்ளது.
 
இறுதியாக 1997 ஆம் ஆண்டு பெர்த் மைதானத்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 10 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
நேற்று பிரிஸ்பேனில் இடம்பெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 191 ஓட்டங்களை பெற்றது.
 
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 8 விக்கட்டுக்களை இழந்த நிலையில், 164 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.